வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் - Theevukaran News வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Adjust the font size:     

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை நாட்டிற்கு கொண்டு வந்த நான்கு சீன பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள 'கிரீன் ரோட்' ஊடாக இந்த சிகரெட் தொகையை கடத்த முற்பட்ட இந்த நான்கு பேரும் இன்று (01) காலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் முப்பதுகளின் நடுப்பகுதியில் உள்ள நான்கு சீன வர்த்தகர்கள் எனவும், சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 72,000 சிகரெட்டுகள் அடங்கிய 360 அட்டைப்பெட்டிகள், அவர்கள் எடுத்துச் சென்ற 06 பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post