அரச நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த வழக்கு இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி சமதாரி பியசேன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான திகதியை வழங்குமாறும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
இதன்படி, முறைப்பாட்டை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்