கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை (2026) பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 3 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை ஆன்லைனில் மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தத்தமது அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தனியார் விண்ணப்பதாரர்கள் உரிய அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்; அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்கள் பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்