இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,951 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய (13) வரையில் மாத்திரம் 1,279 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், 36,795 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் 14,464 நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்