ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய பொது போக்குவரத்து துறை கட்டியெழுப்பப்பட வேண்டும் - ஜனாதிபதி ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய பொது போக்குவரத்து துறை கட்டியெழுப்பப்பட வேண்டும் - ஜனாதிபதி - Theevukaran News ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய பொது போக்குவரத்து துறை கட்டியெழுப்பப்பட வேண்டும் - ஜனாதிபதி ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய பொது போக்குவரத்து துறை கட்டியெழுப்பப்பட வேண்டும் - ஜனாதிபதி
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய பொது போக்குவரத்து துறை கட்டியெழுப்பப்பட வேண்டும் - ஜனாதிபதி

Adjust the font size:     

ஒவ்வொருவருக்கும் பயனளிக்கும் வகையில் தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்துத் துறையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும், இதன் மூலம் மக்கள் போக்குவரத்திற்காக மேற்கொள்ளும் தனிப்பட்ட செலவுகளை குறைத்து தரமான போக்குவரத்து சேவையை நாட்டில் உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவது தொடர்பில் இலவச சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தொடர்பான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் 2026 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பிலான வரவு-செலவுத் திட்டத்திற்கு முந்திய கலந்துரையாடலில் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post