ஜூலை 24 வரை பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் ஜூலை 24 வரை பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் - Theevukaran News ஜூலை 24 வரை பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் ஜூலை 24 வரை பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

ஜூலை 24 வரை பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Adjust the font size:     

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 'பிள்ளையான்' எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடியோ கான்பரன்சிங் தொழில்நுட்பத்தின் ஊடாக சந்தேகநபர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிபதி ஏ.தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post