2016 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் 6 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை செப்டெம்பர் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதாரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விமல் வீரவங்ச சுகயீனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி அன்றைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன், கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக தும்முல்லை உள்ளிட்ட வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்