மஹரகமவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது மஹரகமவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது - Theevukaran News மஹரகமவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது மஹரகமவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

மஹரகமவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Adjust the font size:     

மேல் மாகாண தென் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரிவோல்வரை போன்ற துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதன்படி, மேல்மாகாண தென் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரத வீதிப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹரகம, புகையிரத வீதியை சேர்ந்த 22 வயதுடையவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தென் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post