டெங்கு நோய் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு நுண்கலை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (13) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதைக் கருத்தில் கொண்டு, கடந்த 2ம் தேதி முதல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பல்கலைக்கழகத்தை மூட நடவடிக்கை எடுத்திருந்தது.
மாணவர்கள் தமது சூழல், வகுப்பறைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதில் பொறுப்புடன் செயற்படுமாறு மாணவர்களை கேட்டுக்கொள்ளுமாறு நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கலாநிதி சானி இம்புல்கொட மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்