2 கிலோகிராம் 554 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை மோட்டார் வாகனத்தில் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதற்கமைய, அபரக்க உபகட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்க சந்தேகநபர்கள் வாகனத்தில் நுழைய முற்பட்ட போது, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அபரக்க உபகட்டுப்பாட்டு நிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 28 மற்றும் 32 வயதுடைய பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய கார் மேலதிக விசாரணைகளுக்காக திஹாகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement