ஹொரணை தேர்தல் அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமை மற்றும் கட்சியில் அவர் வகித்து வந்த சகல பதவிகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு சமகி ஜன பலவேகய கட்சி தீர்மானித்துள்ளது.
லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் நடந்த 2023 ஆம் ஆண்டு வரை அவர் கட்சியின் உறுப்பினராகவோ அமைப்பாளராகவோ இல்லை என்றும், அப்போது அவர் சமகி ஜன பலவேகயாவில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என்றும் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் நீதித்துறை நடவடிக்கை எடுப்பதற்கும் சமகி ஜன பலவேகய ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்காது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்