கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சுற்று நிருபத்தின் கீழ் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் நடைமுறைக்கு அமைய, இரண்டு இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
குறித்த சாட்சிகள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாது என குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த அறிவித்தலை அடுத்தே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்