சரித்துக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுப்போம் - சஜித் சரித்துக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுப்போம் - சஜித் - Theevukaran News சரித்துக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுப்போம் - சஜித் சரித்துக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுப்போம் - சஜித்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

சரித்துக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுப்போம் - சஜித்

Adjust the font size:     

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சமகி ஜன பலவேகய கட்சியின் ஹொரண அமைப்பாளர் சரித் அபேசிங்க தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இன்று (25) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து சாத்தியமான கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவோம் என்றும், தவறு செய்பவர்களுக்கு அல்லது குற்றவாளிகளுக்கு தனது கட்சி ஒருபோதும் சலுகைகளையோ பாதுகாப்பையோ வழங்காது என்றும் வலியுறுத்தினார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post