அரச சேவை சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த ஆணைக்குழுவிற்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சம்பள முரண்பாடுகள், பொது நிதி முகாமைத்துவ சவால்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை காண்பதே முதன்மையான நோக்கமாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்