தற்போதைய அரசாங்கம் இத்தருணத்தில் கையாலாகாத நிலைக்குச் சென்று தனது இயலாமையை வெளிப்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்கம் தற்போது ஜோதிட ரீதியாக மோசமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் போது, அரச ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் மக்களை அடக்கி ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்