தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவியான ஷ்யாமிலா பெரேரா இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில் தேசிய லொத்தர் சபையின் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று உத்தியோகத்தர்களை பணியமர்த்தாமல், அன்றைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அலுவலகத்தில் பணியமர்த்தியதன் மூலம் ஊழல் குற்றத்தை இழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்