தொழில்நுட்ப பிழைகள் காரணமாக மையப்படுத்தப்பட்ட இலத்திரனியல் முறையின் ஊடாக பதிவு செய்யும் பணியை முடிக்க முடியாத அரசாங்க அதிகாரிகளுக்கு சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூலை 7ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் அபராதம் அறவிடப்பட மாட்டாது எனவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட இலத்திரனியல் அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது தொடர்பாக எழும் ஏதேனும் சிக்கல்களை ஆணைக்குழுவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனப் பிரிவின் 076 701 1954 மற்றும் 011 2875 ஆகிய இலக்கங்களுக்குத் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்