மாற்றுத்திறனாளிகளுக்கு அரச நிறுவனங்களினால் சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் விசேட முன்னுரிமை அட்டையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஊனமுற்றோருக்கான தேசிய கவுன்சில், ஊரக அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கூடிய போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் முன்னோடி செயற்திட்டம் கடுவெல பிரதேச செயலகத்தை முன்னிறுத்தி நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் வகைப்பாடு குறித்த சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் சபை இணங்கியுள்ளதுடன், மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய சொற்களஞ்சியம் குறித்து அரச கரும மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து பிரசுரம் வெளியிடவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்