எல்பிட்டிய பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போதே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் பொலிஸாரை தாக்கியதுடன், பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் இரண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், இரண்டு அதிகாரிகள் அவர்களை பின்தொடர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர், சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட போது, சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து, பதில் தாக்குதல் நடத்திய பொலிசார் அவரை சுட்டதில் சந்தேக நபரின் கையில் காயம் ஏற்பட்டது.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் பின்னர் மற்றொரு குழுவினர் வந்து அவரை வலுக்கட்டாயமாக மீட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் கொலைக்கு உதவி செய்தல் உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்