தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.
கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் எல் நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ முறைமை சீர்திருத்தங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், தேசிய அனர்த்த ஒருங்கிணைப்பு பொறிமுறை தொடர்பிலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எல் நினோ காலநிலை அமைப்பினால் ஏற்படக்கூடிய எதிர்கால பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, தற்போதைய கணிப்புகள் தரவுகளின் அடிப்படையில் எவ்வாறு அமைந்துள்ளது மற்றும் முன்னைய முன்னறிவிப்புகளுடன் அவை எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக எல் நினோ நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில் விவசாய கைத்தொழில், குடிநீர் விநியோகம் மற்றும் எரிசக்தி உற்பத்தி ஆகிய துறைகளின் தயார்நிலை குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்