அரசாங்கம் ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் டெங்கு அச்சுறுத்தல் முற்றாக ஒழிக்கப்படும் என தாம் நம்பினாலும், அது அவ்வாறு அமையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், 2024 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 500% அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
'தூய்மையான இலங்கை' திட்டத்திற்கு பொது மக்களும் சர்வதேச சமூகமும் ஆதரவளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதனை கணக்காய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் ‘தூய்மையான இலங்கை’ வேலைத்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்