நாட்டில் விவசாய சமூகம் இன்று முற்றிலும் அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், விவசாயிகளுக்கு தரமற்ற விதைகள் கிடைப்பதாகவும், உர மானிய நிதி உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் நெல் வயல்களில் இறங்கி ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா வழங்குவதாக உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார். ஒரு கிலோ நெல்லுக்கான உத்தரவாத விலை சட்டமாக்கப்படும் என்று கூறிய அவர்கள் இன்று விவசாயிகளை நஷ்டத்தில் தள்ளியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் விவசாயி அரசன் போல் ஆட்சி செய்வான் என அரசாங்கம் கூறியதாகவும், ஆனால் அரச அதிகாரத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அதே விவசாயியை தற்போது காசிப்புகரை என முத்திரை குத்துவதாகவும் குறிப்பிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்