ஜின் ஆற்றில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் மிதந்த நிலையில் சடலம் ஒன்று தொடர்பான நீதவான் விசாரணை இன்று (24) நடைபெற்றது.
ஜின் ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று மாலை சடலத்தை மீட்ட பொலிஸார், பொத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வக்வெல்ல பாலத்திற்கு அருகில் மிதப்பதை கண்டுள்ளனர்.
பத்தேகம நீதவானும் மாவட்ட நீதிபதியுமான சனத் நாணயக்கார வக்வெல்ல பாலத்திற்கு அருகில் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை உறவினர்களால் அடையாளம் காண்பதற்காகவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகவும் சடலத்தை காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொத்தல பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்