பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் விசேட போக்குவரத்து சேவைகள் இன்றும் இடம்பெறும் பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் விசேட போக்குவரத்து சேவைகள் இன்றும் இடம்பெறும் - Theevukaran News பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் விசேட போக்குவரத்து சேவைகள் இன்றும் இடம்பெறும் பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் விசேட போக்குவரத்து சேவைகள் இன்றும் இடம்பெறும்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் விசேட போக்குவரத்து சேவைகள் இன்றும் இடம்பெறும்

Adjust the font size:     

பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் விசேட போக்குவரத்து சேவைகள் இன்றும் (30) இடம்பெறும்.

இலங்கை போக்குவரத்து சபை, வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன இணைந்து மேற்கொள்ளும் இந்த விசேட சேவைகள் யாத்திரிகர்கள் திரும்பிச் செல்வதற்கும் வசதியாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையில் இருந்து கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை விசேட பஸ்களை ஈடுபடுத்தியுள்ளதுடன், பஸ்களின் அதிர்வெண்ணையும் அதிகரிக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பல விசேட புகையிரதங்களும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அனுராதபுரத்தில் இருந்து தினசரி செல்லும் புகையிரதங்களுக்கு மேலதிகமாக விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post