கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'பிள்ளையான்' என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தக் கொலைகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 15ஆம் திகதி நீதிமன்றில் அறிக்கை செய்திருந்தனர்.
இந்த கொலைச் சம்பவங்களில் மூன்றாவது சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை அடுத்த முறை உரிய வழக்கு விசாரணைக்கு வரும் போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று (30) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜூலை 13 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்