வருடாந்த பஸ் கட்டண திருத்தம் நாளை (01) முதல் அமுல்படுத்தப்பட வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வருடாந்த பஸ் கட்டண திருத்தக் கொள்கையின் பிரகாரம் இவ்வருடம் பஸ் கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்பது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை எனவும், இந்த பஸ் கட்டண திருத்தத்தின் போது எதிர்பார்த்த பஸ் கட்டண திருத்தம் இடம்பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்