இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை 514 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 21% வளர்ச்சி என்றும், தேங்காய் அறுவடை அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பு ஆகியவை முக்கியமாக இந்த வளர்ச்சியை பாதித்துள்ளதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய யுத்த சூழ்நிலை காரணமாக கிங் தேங்காய் ஏற்றுமதி சுமார் 33% குறைந்துள்ளதாகவும், இலங்கையின் கிங் தேங்காய் ஏற்றுமதியில் சுமார் 95% துபாய் சந்தைக்கு செய்யப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எவ்வாறாயினும், தேங்காய் தொடர்பான ஏனைய ஏற்றுமதி துறைகளில் வளர்ச்சி காணப்படுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்