கோட்டாபய ராஜபக்சவின் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது கோட்டாபய ராஜபக்சவின் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது - Theevukaran News கோட்டாபய ராஜபக்சவின் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது கோட்டாபய ராஜபக்சவின் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

கோட்டாபய ராஜபக்சவின் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Adjust the font size:     

ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்ய தடை விதிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (24) இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, ​​கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இன்று சாட்சியங்களை முன்வைத்தார்.

அதன் பின்னர் மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post