கோட்டாபய ராஜபக்சவின் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது கோட்டாபய ராஜபக்சவின் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது - Theevukaran News கோட்டாபய ராஜபக்சவின் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது கோட்டாபய ராஜபக்சவின் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

கோட்டாபய ராஜபக்சவின் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Adjust the font size:     

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, ​​கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலதிக வாதங்களை முன்வைத்தார்.

அதனையடுத்து, மேலதிக சமர்ப்பிப்புகளை சமர்பிப்பது ஜூலை 06 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post