ஹோமாகம, கொட்டாவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 24 மணிநேர நீர் வெட்டு ஹோமாகம, கொட்டாவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 24 மணிநேர நீர் வெட்டு - Theevukaran News ஹோமாகம, கொட்டாவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 24 மணிநேர நீர் வெட்டு ஹோமாகம, கொட்டாவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 24 மணிநேர நீர் வெட்டு
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

ஹோமாகம, கொட்டாவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 24 மணிநேர நீர் வெட்டு

Adjust the font size:     

லபுகம, கலடுவாவ தொடக்கம் மஹரகம வரையான பிரதான நீர் விநியோக பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று (24) இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், மஹரகம பகுதிக்கு நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு குறைந்த அழுத்த நிலைமைகளின் கீழ் நீர் விநியோகத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீர் விநியோகம் தடைப்பட்டமையினால் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்ததுடன், தண்ணீரை சிக்கனமாக உட்கொள்ளுமாறு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post