2027ஆம் ஆண்டுக்குள் ஒன்பது மாகாணங்களிலும் ஒரே முன்பள்ளிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
வைபவமொன்றில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் ஏனைய கல்வி நடவடிக்கைகளுக்கு இணையாக ஆரம்பக் கல்வியை முன்னெடுக்க வேண்டும் எனவும், கல்வி அமைச்சும் இதில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
முன்பள்ளி பாடமானது நாட்டில் முறைசாரா நிலையிலேயே இருப்பதாகவும், அது இன்னும் பகிரங்கமாகவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்