பாகிஸ்தானின் கிழக்கு லாகூரில் உள்ள பயிற்சி மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும் மேலும் எட்டு குழந்தைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நிலையத்தின் உரிமையாளரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள் 4 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனைய குழந்தைகளை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மையம் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்ததாகவும், பாதியில் முடிக்கப்பட்டிருந்த இரண்டாவது மாடியின் கூரை மோசமான கட்டுமான தரம் காரணமாக இடிந்து விழுந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்