இராணுவ கடேட் உயர் கற்கையினை பூர்த்தி செய்த அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் கெளரவிப்பு

Adjust the font size:     


இராணுவ கடேட் உயர் கற்கையினை பூர்த்தி செய்த அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் கெளரவிப்பு

பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து பாடசாலை மட்டத்தில் சிறந்த ஒழுக்கமுள்ள ஆளுமையான  தலைவர்களை உருவாக்கும் நோக்கில் சிரேஷ்ட ஆணையிடப்படாத அதிகாரிகளுக்கான பயிற்சியானது (NCO's Advance Course) 2023 நவம்பர் மாதம் 22 முதல் டிசம்பர் 02 ஆம் திகதி வரை  தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் ரன்தம்பே பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

மேற்படி உயர் பயிற்சி நெறிக்கு எமது அக்/அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவர்களான CQMS Mizal Ahamed  R(NCO) மற்றும்  எமது பாடசாலையின் கடேட் சார்ஜன் Naprath MNM ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு மேற்படி உயர் கற்கையினை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார்கள்.

இவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் AH.Fous (SLEAS) அவர்களினால் இன்று மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் பாடசாலையின் கடேட் பிரிவின் பொறுப்பாசிரியர் Platoon Commander 2nd லெப்டினன்ட் MM.Asmy, ஏனைய கடேட் அதிகாரிகளான லெப்டினன்ட் AGM.Ishak, 2nd லெப்டினன்ட் J.Niluksan ஆகியோருடன் SDEC செயலாளர் Saboor Adem மற்றும்  பொறியியலாளர் H.Arafath ஆகியோரும் கலந்து கொண்டனர்

இம் மாணவர்கள் மேற்படி கற்கை நெறிக்கு செல்வதற்கு சிபாரிசு செய்த 17வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மற்றும் பயிற்சி அதிகாரிகளுக்கு அதிபர் நன்றி தெரிவிப்பதோடு, இம் மாணவர்கள் மேலும் இத்துறையில் பிரகாசித்து உயர் பதவிகளைப் பெற வாழ்த்துக்களையும்  தெரிவித்துக்கொள்கிறார்.

- அதிபர் (அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி)

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post