கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த மெரெல்லா டிஸ்கவரி

Adjust the font size:     

மெரெல்லா டிஸ்கவரி II எனும் சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

1,274 பயணிகள் மற்றும் 718 பணியாளர்களுடன் பஹாமாஸ் கொடியுடன் இந்தியாவிலிருந்து இந்த கப்பல் வந்துள்ளது.

அவர்களுள் பெரும்பாலோர் ஜெர்மானியர்கள் மற்றும் இத்தாலியர்கள்.

அவர்கள் இலங்கையில் கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளனர்.

செப்டம்பர் 1994 இல் தனது பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தொடங்கிய மெரெல்லா டிஸ்கவரி 264 மீட்டர் நீளம் கொண்டதாகும்.

இதன் மூலம் 1,836 பேருக்கு பயண வசதிகளை கொடுக்க முடியும்.

இக்கப்பல் நாளை (08) இரவு மலேசியா நோக்கி புறப்பட உள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post