டெஸ்லாவின்‌ சைபர்‌ டிரக் ஒன்று 60,990 டாலர்கள்

Adjust the font size:     

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சைபர் டிரக்கை முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

சமீபத்தில், அமெரிக்காவின் டெக்சாஸில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

முதல் டிரக்கை எலோன் மஸ்க் அவர்களே ஓட்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சைபர் டிரக்கின் விலை USD 60,990 ஆகும்.

இது 2019 இல் ஒரு சைபர் டிரக்கிற்கு எலோன் மஸ்க் வாக்குறுதியளித்த விலையை விட 50% அதிகமாகும்.

எதிர்கால உலகிற்கு ஏற்ற வகையில் பிரத்யேக பொருட்களை பயன்படுத்தி இந்த சைபர் டிரக் தயாரிக்கப்பட்டுள்ளதால், இவ்வளவு விலை நிர்ணயம் செய்ய நேரிட்டதாக எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்தால், சைபர் டிரக் 547 கிமீ பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சைபர் டிரக்கிற்கு அதிக தேவை இருந்தபோதிலும், அதன் உற்பத்தியை விரைவுபடுத்துவது மிகவும் கடினம் என்று எலோன் மஸ்க் கூறுகிறார்.

எனினும், 2025ஆம் ஆண்டுக்குள் 250,000 சைபர் டிரக்குகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post