கொழும்பு உட்பட பல புறநகர் பகுதிகளில் அவசர நீர் வெட்டு

Adjust the font size:     

athavannews.com

கொழும்பு உட்பட பல புறநகர் பகுதிகளுக்கு அவசர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபை பகுதிகளிலும், கொட்டிகாவத்தை, முல்லேரிய, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக அந்த பகுதிகளில் திடீர் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதற்கான திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post