இந்நாட்டு இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகள்

Adjust the font size:     

விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் IM ஜப்பான் நிறுவனத்துடன் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் செவிலியர் சேவைகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாயத் துறைகளில் நம் நாட்டின் இளைஞர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஜப்பானிய மொழிப் பரீட்சை மற்றும் விசேட திறன் தொடர்பான பரீட்சையின் 4ஆம் நிலை சித்தியடைந்த இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post