கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 7 மாதக் குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தை தொடர்ந்து இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் குழந்தையை கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் நுரையீரலின் கீழ் பகுதியில் ஏதோ ஒன்று படிந்திருப்பது தெரிந்தது. இதன் காரணமாக, குழந்தைக்கு தொடர்ந்து இருமல் இருப்பது மட்டுமல்லாமல், மூச்சுத் திணறலும் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து குழந்தைக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தையின் வலது நுரையீரலில் ஒரு சிறிய சிவப்பு LED பல்ப் கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து உடனடியாக அதை அகற்றி மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றினர்.
குழந்தையின் பொம்மையில் இருந்து எல்.ஈ.டி, பல்ப் தெரியாமல் வாய் வழியாக உடலுக்குள் சென்றிருக்கலாம் என்றும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத பொம்மைகளை மாத்திரம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
