அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியின் இரண்டாவது ஹாபிழாவிற்கான கௌரவிப்பு விழா

Adjust the font size:     

மேற்படி நிகழ்வானது 2023.08.30 நேற்று புதன்கிழமை மாலை அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னேர்ஸ் அகடமியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் N.M.நிஷாந்த் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
 
அட்டாளைச்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் அல்-குர்ஆனை முழுமையாக மனனம் செய்து வெளியாகிய இரண்டாவது மாணவியான தாரிப் பாத்திமா ருஸ்தாவிற்கான கௌரவிப்பு இடம்பெற்றது.
 
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் N. M. அப்துல்லாஹ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். அத்துடன் விசேட அதிதிகளாக, கலாநிதி அல்- ஹாபிழ் M.I.M.சித்தீக் அஷ்ஹரி, (பணிப்பாளர் அஷ்பால் வின்னர்ஸ் அகடமி )அவர்களும், Dr IL அப்துல் ஹை (தலைவர் அஷ்பால் வின்னர்ஸ் அகடமி அட்டாளைச்சேனை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
அத்தோடு கௌரவ அதிதிகளாக, அக்கரைப்பற்று வலயக் கல்வி பணி மனையின் உதவி கல்விப் பணிப்பாளர் A. M. நௌபர்டீன்( SLEAS ) அவர்களும் சட்டத்தரணி S. M. ஜுனைதீன் (தலைவர் அட்டாளைச்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசல்), மாவட்ட கலாசார உத்தியோகத்தர் T. M. றிம்சான் Dr பஸ்மீனா அரூஸ் (ஆயுர் வேத வைத்திய அதிகாரி, அட்டாளைச்சேனை), A. L.முஸாதிக் (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், அட்டாளைச்சேனை), அஷ்-ஷெய்க் N. M. முஹமட் (அதிபர் அஷ்பால் ஜூனியர் அகடமி) ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னர்ஸ் அகடமியின் அல்-குர்ஆன் மனன பீட பிரிவின் இரண்டாவது ஹாபிழாவாக இவர் பதிவாகியுள்ளார்.
அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் T. பாத்திமா ருஸ்தா அவர்கள் அக்கரைப்பற்று மாநகர சபையில் கடமையாற்றும் A. G. தாரிப் அவர்களின் புதல்வியுமாவார்.
 
இம் மாணவியை கௌரவித்து நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இம்மாணவிக்கு அர்ப்பணிப்புடன் கற்பித்த ஆசிரியர்கள், ஆசிரியைகளையும் கௌரவித்து அதிதிகளால் நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
 
அத்துடன் சிறப்பாக செயலாற்றி அதிகமான ஜூஸூக்களை மனனம் செய்த ஏனைய மாணவிகளையும் ஊக்குவிக்குமுகமாக அவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 
 





 

 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post