இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் எடுத்த தீர்மானம்

Adjust the font size:     

Image - Adaderana.lk

ஆசிய கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட், தற்போதுள்ள குறைபாடுகள் மற்றும் தவறுகளைத் தவிர்த்து எதிர்வரும் உலகக் கிண்ணத்திற்கு தயாராக வேண்டும் எனத் தெரிவித்தார். 

அத்தோடு..

"முதலாவதாக, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற நாங்கள் சிறப்பாக விளையாடினோம். 

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதும் சாதனைதான். ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த விதம் ஏமாற்றம் அளிக்கிறது. 

இது வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பொதுவானது. நாம்  வீரர்கள் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். 

இப்போது நாம் அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும், அவர்கள் வீட்டிற்குச் சென்று மீண்டும்  வரும்போது, ​​​​நாம் விட்ட இடத்தில் இருந்து அணியை மீண்டும் உருவாக்க வேண்டும்"

என அவர் தெரிவித்தார். 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post