மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாயல் வளாக கட்டடத்தொகுதி : அடிக்கல் நடும் நிகழ்வு

Adjust the font size:     



 

நாலரைக்கோடியில் மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாயல் வளாக கட்டடத்தொகுதி :  அடிக்கல் நடும் நிகழ்வு  

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மாவடிச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தின் அயராத முயற்சினால் பள்ளிவாயல் வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடைத் தொகுதிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (11) வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

பள்ளிவாயல் தலைவர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேளை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக பள்ளிவாயலின் முன்னாள் தலைவர் ஏ.யூ.எல்.அலியார், கல்குடா ஜம்மியதுல் உலமா சபைத்தலைவர் மௌலவி எம்.எம்.தாஹிர், தக்வா பள்ளிவாயல் தலைவர் சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக், சட்டத்தரணிகளான ஹபீப் றிபான், எம்.ஐ.றஸ்மின், எம்.முபீன், மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய அதிபர் எம்.சி.எம்.ஐயூப்கான், பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள் ஊர் ஜமாத்தார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பள்ளிவாயலின் வரலாறு தொடர்பாகவும் பள்ளிவாயலுக்கு கடைத்தொகுதி அமைப்பதன் அவசியம் தொடர்பாகவும் மாவடிச்சேனை தபால் நிலைய அதிபரும் தக்வா பள்ளிவாயல் பேஸ் இமாமுமாகிய மௌலவி எம்.எச்.எம்.அஸ்ரப் உரை நிகழ்த்தினார்.

நாலு கோடி ஐம்பத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியில் பதினொரு கடைகள் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்கான ஆரம்பக்கட்ட நிதிப்பங்களிப்பாக நிருவாகத்திலுள்ள மூன்று பேர் பத்து இலட்சம் ரூபா வீதம் முப்பது இலட்சம் ரூபா பங்களிப்புச் செய்துள்ளதுடன், ஏனைய நிருவாக சபை உறுபபினர்களதும் ஊர் ஜமாத்தார்களின் பங்களிப்புடன் இக்கடைத்தொகுதிகள் அமைக்கப்படவுள்ளது.

இக்கடைத்தொகுதிகள் அமையப்பெறுவதற்கு ஒரு சதுர அடிக்கு எட்டாயிரத்து ஐநூறு ரூபா வீதம் பொது மக்களிடமிருந்து நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுவதாக பள்ளிவாயல் தலைவர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post