மாற்றப்படும் காத்தான்குடி மீரா பாலிகாவின் வரலாறும் மகுடம் சூடும் மன்சூர் அதிபரும்

Adjust the font size:     



காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் வரலாற்றில் முதன் முதலாக மாகாண மட்ட சதுரங்கம் (செஸ்) போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர். இம்மாணவிகளை பாராட்டும் நிகழ்வானது இன்று (08/08/2023) காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை வளாகத்தில் அதிபர் அஷஷேக் UL..மன்சூர் சேர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெற்றி பெறற மாணவிகள் வீதியால் பேரனியாக பாடசாலை விளையாட்டு மைதான பார்த்திருப்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு அதிதிகளால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் SMM.அமீர் சேர் அவர்களும் விசேட அதிதிகளாக உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் MLM.முதர்ரிஸ் சேர் அவர்களும் கோட்டக்கல்வி பணிப்பாளர் AGA.ஹக்கீம் சேர் மற்றும் வலயத்தின் சிறுவர் மெய்வல்லுனர் இணைப்பாளர் SLHM.இனாமுல்லாஹ் சேர் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
இதுவரை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையானது அதிபர் அஷஷேக் UL.மன்சூர் சேர் அவர்களின் தலைமையில் பல சாதனைகளை நிலை நாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தற்போது 20 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் சதுரங்கம் (செஸ்) போட்டிகளில் பெற்ற வெற்றியானது இதுவரை பாடசாலை வரலாற்றின் புதிய மைல் கல்லாகும் எனவே இவ்வரலாற்றினை மாற்றி மற்றுமொரு முறை மகுடம் சூடிக் கொள்கிறார் அதிபர் UL.மன்சூர் சேர் அவர்கள் அவருக்கும் வெற்றிபெற்ற மாணவியர்களுக்கும் வெற்றிக்கு காரணமான உடற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

- NM.முஹமட் ஸாலிஹ்
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post