ஜெயிலர் (2023)

Adjust the font size:     

 


சிலைக் கடத்தல் குற்றவாளிகளை பிடிக்க போய் மர்ம்மான முறையில் கொலை செய்யப்பட்ட தனது மகனை கொன்றவர்களை பழி வாங்கும் முன்னாள் போலிஸ் அதிகாரியின் கதை..
மகனின் கொலைக்கு பலிக்கு பலி என்கிற பார்த்து பழகிய கதையை, ரஜினியின் மாஸ் ஸ்க்ரீன் பெர்சன்ஸ், நெல்சனின் டார்க் காமெடி ஸ்க்ரீன்ப்ளே, அனிருத்தின் அதிர வைக்கிற பிஜிஎம் எல்லாம் சேர்ந்து ப்ரஸ்ஸாக கொடுத்திருக்கிறது..
கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று பல மாநிலங்களில் கதை நகர்கிறது.. ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.. அனைவருமே நன்கு பரிச்சயமான முகங்கள்.. அத்தனை பேருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.. இருந்தும் எல்லோரையும் மீறி ரஜினிகாந்த் தான் ஸ்கோர் செய்கிறார்.. அதனால் தான் அவர் உச்ச நட்சத்திரம்.. இந்த ஸ்க்ரீன் பெர்சன்ஸ் இருக்கும் வரை அவர் தான் சூப்பர்ஸ்டார்..
ரஜினியின் முந்தைய படங்களான தர்பார், அண்ணாத்த மாதிரி காதல், டூயட் என்றெல்லாம் கோமாளித்தனம் பண்ணாமல், ரஜினியின் வயதிற்கேற்ப கதாபாத்திரத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை மாஸ் மூவ்மென்ட்ஸையும் கொடுத்து படையப்பா, பாட்ஷாவில் பார்த்த ரஜினியை மீண்டும் கொண்டுவந்திருக்கிறார் நெல்சன்..
படம் ஆரம்பித்த மூன்றாவது சீனிலேயே இன்டர்வெல் வந்ததை போன்ற உணர்வை தருகிறது நெல்சனின் ஜெட் வேக முதல் பாதி ஸ்க்ரீன்ப்ளே.. ஆனால் இரண்டாம் பாதியில் அந்த மேஜிக் மிஸ் ஆனது தான் வருத்தம்.. படத்தின் எந்த காட்சியிலும் லாஜிக்கை எதிர்பார்க்க முடியாது.. ஆனாலும் மூன்று சூப்பர்ஸ்டார்கள் என்ட்ரி கொடுக்கும் அதகள க்ளைமேக்ஸ் அந்த குறைகளை நிவர்த்தி செய்கிறது.. ரஜினி படத்தில் ரத்தம் தெறிக்க கூடிய குரோதமான காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்..
பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு டார்க் காமெடி ஜானரில் மாஸான ஆக்சன் படத்தை கொடுக்கும் நெல்சனின் பார்முலா வரவேற்க தக்கது.. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளை தவிர்த்து விட்டால் வெகு நாட்களுக்கு பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க கூடிய ரஜினி படம்..
Sureshot வின்னர்..
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post