விமல் வீரவன்சவின் சகோதரர் மீண்டும் விளக்கமறியலில்

Adjust the font size:     

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் தொடர்பான உத்தரவை அன்றைய தினம் பிறப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொறியியல் கழக வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

#regarding #weerawansa #allegedly #charged #stated #wimal #amarasena #magistrate #which #incident
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post