அர்ச்சுனா ராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Adjust the font size:     

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதன்படி, கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த வழக்கு தொடர்பில் எம்.பி இன்று நீதிமன்றில் ஆஜராகவில்லை எனவும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#failure #regarding #obstructing #magistrates #stated #accordingly #warrants #parliamentarian #archuna #jaffna
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post