குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சந்தேகநபர் கைது

Adjust the font size:     

குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (27) காலை 09.25 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் எடுத்துச் சென்ற சூட்கேஸில் 1.480 கிலோகிராம் குஷ் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர், இதன் மதிப்பு சுமார் 14.8 மில்லியன் ரூபாய்.

கைது செய்யப்பட்டவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஓவியர் ஆவார். அவரும் அவர் கொண்டு வந்த குஷ் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

#magistrates #drugs #ul403 #brought #suitcase #police #produced #approximately #airlines #arrested
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post