சுகீஸ்வர பண்டார ஜூலை 30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Adjust the font size:     

புதிய ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளராக கடமையாற்றிய போது, ​​ஜனாதிபதியின் செலவின தலைப்பின் கீழ் இரண்டு சம்பளம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

#relevant #former #remanded #expenditure #today #order #gotabhaya #presidential #ranil #court
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post