2032 அல்லது 2035 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் முழு நகர்ப்புற போக்குவரத்து முறையை மெட்ரோ பேருந்துகளாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிக்கும் என்றும், 2027 ஆம் ஆண்டளவில் 272ஐ எட்டும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
500 மெட்ரோ பேருந்துகளை விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் இறுதி இலக்கு என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இந்தத் தொழிலில் சேர தனியார் துறை, நகராட்சி மன்றங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார்.
2032 அல்லது 2035 க்குள் மொத்த நகர்ப்புற போக்குவரத்தை மெட்ரோ பேருந்துகளாக மாற்றுவது ஒரு பரந்த மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும், மெட்ரோ நிறுவனமும் தனியார் துறையும் இந்த முயற்சியின் ஒருங்கிணைந்த கூறுகளாக செயல்படுகின்றன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறினார்.