2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகள் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெறாதவர்கள் தமது பாதுகாவலரின் அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி பரீட்சைக்கு பதிவு செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவுறுத்தல் தொகுப்பு ஏற்கனவே அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் இன்று (15) பிற்பகல் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 23 ஆம் திகதி வரை ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டையை இதுவரை பெற்றுக்கொள்ளாத விண்ணப்பதாரர்கள் உரிய திகதிக்கு முன்னர் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதைத் தடுக்கவில்லை எனவும், அனைத்து விண்ணப்பதாரர்களும் 2026 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறும் பரீட்சை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசித் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்