புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளின் தகவல்களில் திருத்தங்களைச் செய்வது அவசியமானால், ஆகஸ்ட் 03 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று "Our Services" இன் கீழ் "Exam Information Centre" ஐ அணுகுவதன் மூலமோ அல்லது onlineexams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலமோ உரிய திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளின் வருகைப் பதிவுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.